ஜேர்மனியில் முழுவதுமாக முகத்தை மறைக்கும் பர்தா அணிய தடை விதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.உள்நாட்டு போர், தீவிரவாதம் உட்பட பல்வேறு காரணங்களால் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படை யெடுக்கின்றனர்.குறிப்பாக ஜேர்மனி புலம்பெயர்ந்து வரும் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. இதுவே தீவிரவாத தாக்குதலுக்கு காரணமாக உள்ளது என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.இதற்கிடையே கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் உட்பட பல் வேறு தீவிரவாத தாக்குதல்கள் நடந்ததால் முகத்தை மறைக்கும் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து உள்துறை அமைச்சர் தாமஸ் டி மைஜியர் கூறுகையில்,பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி தேர்தல் அதிகாரிகள், நீதித்துறை அலுவலர்கள் மற்றும் ராணுவத்தினர் உட்பட அரசு அதிகாரிகள் அவர்களது பணியின் போது முகத்திரை அணிந்து சேவையாற்றுவதற்கு இந்த தடை பொருந்தும்.எனினும் நோய் தொற்றுகளில் இருந்து சுகாதார பணியாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகத்திரை அணிந்து கொள்ளலாம்.தேவைப்படும் பட்சத்தில் பொலிஸ் அதிகாரிகளும் முகத்திரை அணிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்