அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் போர் கப்பல் போன்றவைகள் மீது தாக்குதல் நடத்துவது போல ஒரு காணொளியை வடகொரியா வெளி யிட்டுள்ளது. இது அமெரிக்கவை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இது தங்களுடைய பாதுகாப்புக்கானது என அது விளக்கமளிக்கிறது. அணு ஆயுத போர் வெடிக்கும் நிலை தோன்றினால் அனைத்து எதிரிகள் படையும் அழிக்கப்படும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அமெரிக்காவோ வட கொரியா மேற்கொள்ளும் அணு ஆயுத சோதனையை நிறுத்துவதே எங்கள் நோக்கம் என்றும் உலகப்போருக்கு நாங்கள் வழிவகுக்க வில்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த காணொளியில், அண்மையில் அமெரிக்கா வடகொரிய கடல் எல்லைக்கு அனுப்பிவைத்த நீர்மூழ்கி கப்பலையும் தகர்ப்பதாக காண்பிக்கப்படுகிறது. காணொளி முடிவில் அமெரிக்காவின் தேசியக் கொடி எரிக்கப்படுகிறது. வடகொரியா மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தால், அவர்கள் தான் அழிவை சந்திப்பார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட
மேலும்தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான
மேலும்அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்
மேலும்கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக
மேலும்