சிங்கப்பூரில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி வழக்கில் 5 தமிழர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தியாவை சேர்ந்த கோதண்டராமன் ஞானம் (29) வைத்தியலிங்கம் கருணாநிதி (61) கருணாநிதி ராஜேஷ் (32) ராமையன் கார்த்திகேயன் (43) கருணாநிதி சரவணன் (36) ஆகி யோர் சிங்கப்பூரில் தங்கியுள்ளார்கள். இவர்கள் ஐவரும் சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் இந்தியர்களின் குடியுரிமையை வைத்து அந்நாட்டு அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் சலுகை பெற்று தொழில் செய்துவந்துள்ளனர்இவ்வாறு செய்த தொழில் மூலம் 160,000 டொலர் வரை பண மோசடியும், வரி ஏய்ப்பும் செய்துள்ளனர். இதனை தற்போது கண்டுபிடித்த அரசு அதிகாரிகள் ஐவரையும் கைது செய்துள்ளார்கள்.ஐவர் மீதும் 1300 குற்றச்சாட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இது தவிர 127 பண மோசடி வழக்குகளும் தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல் ஐவரும் தங்கள் பாஸ்போர்டை வைத்து நகைகடைகளில் ஈ.டி.ஆர்.எஸ். டிக்கெட்களும் பெற்றுள்ளனர். ஐவரில் கருணாநிதி சரவணனுக்கு 38 மாதம் சிறை தண்டனையும், மற்ற நால்வருக்கும் 39 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்