வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலால் வட கொரியா மற்றும் தென் கொரியாவில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. அமெரிக்கா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தாலும் அதை வட கொரியா ஏற்பதாக தெரியவில்லை. மேலும், எங்களிடம் உள்ள ஏவுகணையை வைத்து ஒரே அடியில் அமெரிக்காவை தகர்ப்போம் என வட கொரியா எச்சரித்துள்ளது. இதனிடையில், இந்த வாரம் மீண்டும் இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரமான அணு ஆயுத சோதனையை நடத்த வட கொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், மூன்றாம் உலக போர் தொடங்கும் என சூசகமாக வட கொரியா தெரிவித்துள்ளது. இதனிடையில், வட கொரியா மற்றும் தென் கொரியாவில் இருக்கும் 230,000 அமெரிக்கர்களை பாதுகப்பாக அங்கிருந்து வெளியேற்ற அமெரிக்க ராணுவத்துக்கு டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும், இங்கிருந்து அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவதற்காக அவசரகால பயிற்சிகளை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மூன்றாம் உலக போர் பதற்றத்த்தால் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த மூன்று முக்கிய நபர்களை வடகொரியா கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்