அணு ஆயுதம் மூலம் ஆஸ்திரேலியாவை தகர்போம் என கூறியுள்ள வட கொரியா அதன் மூலம் மூன்றாம் உலக போர் தொடங்கும் என சூசகமாக தெரி வித்துள்ளது.வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிக்கையில், வடகொரியாவை தனிமைப்படுத்தும் மற்றும் அகற்றும் முயற்சியில் இருக்கும் அமெரிக்காவின் செயலை ஆஸ்திரேலியா பின்பற்றினால் அது கண்டனத்துகுரியது. இதை ஆஸ்திரேலியா செய்வது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். இதை அவர்கள் தொடர்ந்தால் அவுஸ்ரேலியா மீது அணுகுண்டு வீசுவோம் என கூறப்பட்டுள்ளது. இது நடந்தால் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கலை மையம் Opera House தகர்க்கப்படும். இந்த தாக்குதல் மூலம் மூன்றாம் உலக போரை ஆரம்பிப்பது வட கொரியாவின் திட்டம் என நம்பப்படுகிறது. இதனிடையில், வட கொரியாவின் அணு குண்டு அனுகுமுறை நம் பிராந்தியத்திற்கு ஏற்கத்தக்கது அல்ல என அவுஸ்ரேலியா வெளியுறவு துறை அமைச்சர் Julie Bishop இரு தினங்களுக்கு முன்னர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்