ஜேர்மனியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி ஒன்று பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேர்மனியில் ஆளும்கட்சிக்கு எதிராக சமீபத்தில் மாகாண தேர்தலில் AfD என்ற கட்சி முதன்மை இடத்தை பிடித்து ஆளும்கட்சியை மூன்றாவது இடத்திற்கு தள்ளியது. இதனை தொடர்ந்து இக்கட்சியின் துணைத்தலைவராக பதவி வகித்து வரும் Frauke Petry என்பவர் ஜேர்மனியில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பொது தேர்தலில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அகதிகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை உடைய இக்கட்சி தேர்தலி போட்டியிடக்கூடாது என எதிர்ப்புகள் கிளம்பின. இதனை தொடர்ந்து பொது தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என Frauke Petry கடந்த வாரம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.எனினும், இக்கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50,000 பேர் இன்று போராட்டத்தில் ஈடுப்பட உள்ளனர்.ஜேர்மனியில் உள்ள Cologne நகரில் தொடங்க உள்ள இப்போராட்டத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் சுமார் 4,000 பொலிசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்க்க கண்ணீர் புகைக்குண்டுகள், ஆயுதங்கள் ஏந்திய பொலிசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.நகர் முழு வதும் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருவதால் Cologne நகரில் ஒருவித அசாதாரண சூழல் நிலவி வருவதாக தகவல்கள் வெளியா கியுள்ளன.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்