அமெரிக்காவில் தலைமை சர்ஜனாக பணிபுரியும் இந்திய வம்சாவளி மருத்துவரை டிரம்ப் அந்த பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.அமெரிக்க அரசின் சுகாதார துறையில் தலைமை சர்ஜன் மருத்துவராக பணியாற்றுபவர் விவேக் மூர்த்தி (39) இவரின் பூர்வீகம் இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஆகும். விவேக் கடந்த ஒபாமா ஆட்சியில் 2014ல் அமெரிக்காவின் 19-வது சர்ஜன் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இந்த பதவியை ஏற்ற முதல் இந்திய வம்சாளி நபர் விவேக் ஆவார்.இந்நிலையில், விவேக்கை அந்த பதவியிலிருந்து நீக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அமெரிக்க சுகாதார துறை வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில், அமெரிக்காவின் தலைமை சர்ஜனாகவும் சுகாதாரத்துறையின் தலைவராகவும் இருந்துவரும் விவேக் மூர்த்தி அந்த பதவி யில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே தலைமை அரசு வழக்கறிஞராக இருந்த பிரீத் பஹாரா என்னும் இந்தியரை டிரம்ப் அரசு பதிவி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்