ஜேர்மனி நாட்டில் நண்பருடன் சேர்ந்து பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து அதனை பேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்ட தந்தையை பொலி சார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.ஜேர்மனியில் உள்ள Lubeck நகரில் 27 வயதான தந்தை தனது 2 வயதான மகளுடன் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ததால் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது 47 வயதான நபருடன் சேர்ந்து தந்தை மது அருந்தியுள்ளார். பின்னர், தன்னுடைய நண்பருடன் சேர்ந்து மகளை பாலியல் சித்ரவதை செய்துள்ளார். இக்கொடூரமான காட்சிகளை பேஸ்புக்கில் நேரலையாகவும் வெளியிட்டுள்ளார்.இக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொலி சாருக்கு எண்ணற்ற புகார்கள் சென்றுள்ளன. வெளியான பரபரப்பை தொடர்ந்து பேஸ்புக்கில் இருந்து வீடியோ உடனடியாக நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தந்தையையும் நண்பரையும் பொலிசார் அதிரடியாக கைது செய்தனர். தந்தையிடம் நடத்திய விசாரணையில், விருந்து நிகழ்ச்சிக்கு முன்னதாகவும் குழந்தையிடம் பலமுறை தந்தை அநாகரீகமாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. தந்தையையும் அவரது நண்பரையும் சிறையில் அடைத்துள்ள பொலிசார் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்