சர்வதேச அளவில் கொடிய நோய்களை பரப்பி சுமார் 3 கோடி மக்கள் தொகையை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லும் சூழல் உருவாகியுள்ளதாக உலக கோடீஸ்வரரான பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுதுள்ளார். இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள Royal United Services Institute நிறுவனத்தில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பில் கேட்ஸ் நேற்று பங்கேற்றுள்ளார். அப்போது, சர்வதேச அளவில் தீவிரவாதிகள் மூலம் மக்கள் எதிர்க்கொண்டு வரும் பிரச்சனைகள் தொடர்பாக பேசியுள்ளார். அதில், அணுகுண்டு ஆயுதங் களை விட தீவிரவாதிகள் தற்போது புதிய ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது, பெரியம்மை உள்ளிட்ட கொடிய நோய்களை மக்கள் மத் தியில் பரப்புவதன் மூலம் சுமார் 3 கோடி மக்கள் வரை கொல்லப்பட வாய்ப்புள்ளது என பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நவீன உலகத்தில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு மிக எளிதாக மக்கள் சென்று வருகிறார்கள். இதுபோன்ற ஒரு சூழலில் கொடிய நோய்களை பரப்பினால் அவை பல நாடுகளில் வேகமாக பரவி கோடிக்கணக்கான உயிர்களை பலி வாங்கும். உதாரணத்திற்கு, கடந்த 1919-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பரவிய கொடிய நோய் ஒன்று 10 கோடி மக்களை பலி வாங்கியது. இதே போன்ற ஒரு கொடிய நிகழ்வு மீண்டும் நடக்காமல் இருக்க உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பலவீனமான நாடுகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பணக்கார நாடுகள் அதிகளவிலான நிதியுதவியை அளிக்க வேண்டும். பிரித் தானிய அரசும் இதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வேதிப்பொருட்கள் மற்றும் நோய்களை பரப்பி தாக்குதல் நடத்த முயற்சித்து வரும் தீவிர வாத அமைப்புகளை ஒழிக்க உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் எனவும் பில்கேட்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்