பிரான்ஸைச் சேர்ந்த ஆபிரகாம் பாயின்சிவல் மூன்று வாரங்களாக 9 கோழி முட்டைகளை அடைகாத்து, கோழிக் குஞ்சுகளைப் பொரித்துள்ளார்.பாரிஸில் வினோதமான செயல்களால் மக்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் ஆபிரகாம் பாயின்சிவல். இவர் கோழி முட்டைகளை தன்னால் அடைகாத்துப் பொரி யவைக்க முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளார். பாரிஸில் உள்ள ஒரு கண்காட்சியகத்தில் மூன்று வாரங்கள் முட்டைகளின் மேல் அமர்ந்து அடைகாத்துள்ளார் இவர். அடைக்கப்பட்ட கண்ணாடிப் பெட் டகத்துக்குள், வெப்ப நிலையை அதிகரிக்கும் உணவுகளை மட்டுமே உட்கொண்டு அவர் மூன்று வாரங்கள் உறங்கியுள்ளார். தான் அடைகாத்துப் பொரிய வைத்த கோழிக் குஞ்சுகளைத் தனது பண்ணையில் வளர்க்க விருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே,ஆபிரகாமின் செயலுக்கு 'பீட்டா' உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆபிரகாமின் செயல் விலங்குகள் நல உரிமைக்கு எதிரானது எனவும், இது கொண்டாடக்கூடிய ஒரு சாதனை அல்ல எனவும் விலங்குகள் நல அமைப்புகளின் தரப்பில் கூறப் பட்டுவருகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்