விடுதலைப்புலிகளை அழிப்பதிலும் அவர்களுக்கு எதிரான போரிலும் தன்னுடைய பங்கைவிட இந்தியாவின் பங்கு மிகப்பெரியது என்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே அதிர்ச்சி தகவலை வெளியிட் டுள்ளார். ‘அந்தப் போர் என்னுடையது மட்டுமல்ல. இந்தியாவினுடையதும்தான்’ என்றார் ராஜபக்சே. இந்தியாவின் அபரிமிதமான ஆதரவும் பங்களிப்பும் இல்லாமல் இருந்து இருக்குமானால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை உண்மையிலே என்னால் முன்னெடுத்து இருக்க முடியாது என்று இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராஜபக்சே மேற்கண்டவாறு கூறினார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நான் முன்னெடுத்த போது நான் இந்தியாவை உதவி செய்யச் சொல்லி கேட்கவில்லை. ஆனால், இந்தியாவே முன்வந்து என் அரசுக்கும் எனக்கும் உதவி வழங்கியது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு தற்கொலை தாக்குதல் மூலம் கொல்லப் பட்டார். இந்த கொலையில் நேரடியாக விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்டு இருந்தனர். அதேபோன்று பல கொலைகளின் பின்னணியில் புலிகள் இருந்தனர். எனவே நான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுப்பதற்கு முன்பே இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சி, நாங்கள் கேட்காமலேயே பல உதவிகளை செய்ய முன்வந்தது. இந்த போரை இந்தியாதான் முன்னின்று செய்தது. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை நடத்திய போர், இந்தியாவின் போராகவே காணப்பட்டது. ராஜீவ் கொலையை அவர்கள் மறக்கவில்லை. எனவே துணிந்து இந்தியா எங்களுக்கு உதவி செய்தது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான யுத்த முடிவிற்கு, அனைத்துவித உதவிகளையும் இந்தியா வழங்கியிருந்தது. சீனா, பாகிஸ்தான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் இலங்கைக்கு உதவிகளை வழங்கின. எனவேதான் இந்த தகவலை நாள் இதுவரையில் வெளியிடாமல் இருந்து வந்தேன் என்று ராஜபக்சே தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற உச்சக்கட்ட போர் முடிவுக்கு வந்தது. இந்த போரின்போது, லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டனர். மேலும், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்