பிரான்ஸில் நடைபெறவுள்ள தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் இரு இஸ்லாமியவாதத் தீவிரவாதிகளை பிரெஞ்சு பாது காப்புப் படையினர் கைது செய்துள்ளனர். பிரான்ஸின் தென்பகுதி நகரான மார்செயில் நட்த்தப்பட்ட சோதனைகளின்போது, துப்பாக்கிகளும், குண்டு தயாரிக்க உதவும் ரசாயனப் பொருட்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களை வைத்து தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டிருந்த Clement Baur, Mahiedine Merabet ஆகியோரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ள னர். பிரெஞ்சு உள்துறை அமைச்சர் மத்தியாஸ் ஃபெக்கல் கூறியதாவது, உடனடியாக தாக்குதல் நடத்தப்படவிருந்தது முறியடிக்கப்பட்டுள்ளது. இதனை யடுத்து, வேட்பாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை மோன்ப்பெய்யர் நகரில் நடக்கவுள்ள மத்திய வலது சாரி வேட்பாளர், பிரான்சுவா ஃபியோனுக்கு ஆதரவான தேர்தல் பேரணியில் பொலிசார் நிலை நிறுத்தப்படுவார்கள். சந்தேக நபர்களின் புகைப்படங்கள், ஞாயிறன்று நடக்கவுள்ள முதல் சுற்றுத் தேர்தலில் முன்னணி வேட்பா ளர்களான, எம்மானுவேல் மேக்ரோன் மற்றும் மரின் லெ பென் ஆகியோருக்கு ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்