எகிப்தின் லச்சர் நகர் அருகே உள்ள பழங்கால கல்லறையில் இருந்து 8 மம்மிகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தின் பண்டைய கால நாகரீகத்தில் அரச குடும்பங்களை சேர்ந்தவர்களின் உடல்களை பெரிய கல்லறைக்குள் பாதுகாப்பாக வைப்பது வழக்கம். இந்த உடல்கள் மம்மி என அழைக்கப்படுகின்றன. தற்போது இது தொடர்பான ஆராய்ச்சிகள் எகிப்தில் நடந்த போது அதன் லக்சார் நகரத்தில் சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறையிலிருந்து 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது முக்கிய அரச குடும்பத்தின் மம்மியாகும். மம்மிகளுடன் சேர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள், மரத்தால் செய்யப்பட்ட வண்ணம் தீட்டிய பெட்டிகள், ஆயிரத்திற்கும் அதிக மான இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடைய சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எகிப்திய மம்மிகள் குறித்த ஆராய்ச்சியில், இந்த கண்டுபிடிப்பு முக்கியமானதாக கருதப்படும் நிலையில் இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்