மின்சார நாற்காலியில் மகிந்த ராஜபக்சவை அனுப்புவதுதான் காணாமல் போனோருக்காக போராடும் அமைப்பின் நோக்கம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீர சேகர தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மகிந்தவின் ஆட்சியில் மின்சார நாற்காலி தொடர்பில் அதிகம் பேசப்பட்டது. இப்போது பேசுவதில்லை. இதனால் அரசியல் நோக்கம் கருதியே அப்போது நாம் இதைப் பேசி வந்தோம் என்று சொல்கின்றனர். உண்மையில்,மின்சார நாற்காலி ஆபத்து இன்னும் நீங்கவில்லை.வேறொரு வடிவில் அது மகிந்தவை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.நாம் இதை மறந்துவிட்டு வேறு பிரச்சினைகள் பற்றி பேசுகின்றோம். காணாமல் போனோர் அமைப்பு மூலம்தான் மகிந்த மின்சாரக் நாற்காலியில் ஏற்றப்படப் போகின்றார். ஜனநாயக விரோதமான முறையில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டமானது காணாமற்போனோரின் உறவினர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் காணாமற்போனோரைக் கண்டு பிடிப்பதற்குமே பயன்படுத்தப்படும் என்று சிலர் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அப்படி எதுவும் நடக்காது. இந்தச் சட்டத்தின் மூலம் புலிகளும் படையினரும் சமமாக பார்க்கப்படுகின்றனர். காணாமற்போனோர் தொடர்பில் வீடியோ, ஈமெயில் போன்ற சாட்சிகளை இந்த அமைப்பு உண்மையான சாட்சியாக ஏற்றுக்கொள்ளும். விசாரணையாளர்கள் விரும்பிய நேரத்தில் அனுமதி இன்றி எந்தவோர் இராணுவ முகாமுக்குள்ளும் செல்ல முடியும். வேண்டிய ரகசியங்களைப் பெற முடியும். வெளிநாடுகளில் இருந்தவாறே சாட்சியம் வழங்க முடியும். குற்றவாளிகளாகக் காணப்படும் படையினருக்கு எதிராக போர்க் குற்ற நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும். வெளிநாடுகள் நேரடியாகத் தலையிட முடியும். இறுதியில் மகிந்கவே போர்க் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்படுவார். அதுதான் நடக்கப் போகின்றதுஎன்றார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்