போரால் சிதைந்து போன இரு ஷியா கிராமங்களில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 15 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. போரினால் சிதைந்து போன ஷியா பிரிவினரின் 2 கிராம மக்கள் சிரியாவின் அலெப்போ நகருக்குள் நுழைய இருந்த நிலையில், பேருந்து மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 39 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமானோர் இந்த வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந் துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு தாக்குதலில் பேருந்து உருக்குலைந்து சின்னாபின்னமாகியுள்ளது. குறித்த சம்பவம் அலெப்போ நகரின் புறநகர் பகுதியில் நடந்துள்ளது. இங்கிருந்து 10க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஷியா பிரிவு கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் நடந்து வந்தது. இந்த நடவடிக்கைகளை தடுக் கும் பொருட்டு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாகுதலுக்கு பின்னர் அப்பகுதி முழுமையும் கரும்புகையால் சூழப்பட்டும் உடல்கள் தரையில் சிதறிய நிலையில் காணப்பட்டதாக சிரியாவில் தங்கி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பிரித்தானிய மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்