வட கொரியா தலைநகர் பியோங்கியாங்கில் இருந்து 6 லட்சம் பொதுமக்களை வெளியேற்ற கிம் அரசு உத்தரவிட்டுள்ள தகவல் உலக நாடுகளிடையே பர பரப்பை கிளப்பியுள்ளது. வட கொரியா அதிபர் கிம் ஜோங் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளி யானது முதல் உலக நாடுகளின் மொத்த பார்வையும் அந்த நாட்டின் மீது தற்போது திரும்பியுள்ளது. மேலும் நகர பகுதிகளில் குடியிருக்கும் 25 விழுக்காடு பொதுமக்களையும் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளதாக ரஷ்யாவில் இருந்து வெளி யாகும் சில தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் பொதுமக்களை ஏன் வெளியேற்றப்படுகிறார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை அந்த தகவலும் அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்காவுடன் போர் மூளும் அபாயம் ஏற்பட்டதை அடுத்தே வட கொரியா அதிபர் கிம் ராணுவ நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக கூறப் படு கிறது. ஆனால் ஆறாவது முறையாக அணு சோதனைக்கு தயாராவதால் இந்த வெளியேற்ற நடவடிக்கை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வட கொரியாவை சீனா கண்டிக்க தவறினால் அமெரிக்கா கடுமையான முடிவை எடுக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத் திருந்தார். இதனைத்தொடர்ந்தே வட கொரியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முன்னெப்போதும் இல்லாதவகையில் ஈடுபட்டுவருவதாக கூறப் படுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்