சீனாவில் இருந்து வட கொரியா செல்லும் அனைத்து விமான சேவைகளையும் அந்த நாடு அதிரடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. போர் சூழல் காரணமாக வட கொரியாவுக்கான அனைத்து விமான சேவைகளும் சீனா அதிரடியாக நிறுத்தியுள்ளதை அடுத்து வட கொரியாவில் இருந்து கடைசி விமானமும் பீஜிங் விமான நிலையத்தில் வந்து சேர்ந்துள்ளது. வட கொரியாவின் தேசிய தினத்தை மிக சிறப்பாக அரசு கொண்டாடடுறது. ஆனால் இந்த கொண்டாட்டங்களின் பின்னணியில் அணுகுண்டு சோதனை நடக்கலாம் என பெரும்பாலான அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். வட கொரியாவின் முரட்டு பிடிவாதத்தையும் தொடர்ந்து நடத்திவரும் அணு சோதனைகளையும் சீனா கண்டித்து வருகிறது. இருப்பினும் வட கொரி யாவுக்கு எதிராக சீனாவின் இந்த கண்டனங்களும் எச்சரிக்கைகளும் வெறும் கண்துடைப்பு நாடகம் என்றே கருதுகின்றனர். மட்டுமின்றி அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்க நேர்ந்தால் கண்டிப்பாக இந்த போரில் வெற்றியாளராக எவரும் எழப்போவதில்லை என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.மேலும், இதுவரை இல்லாத வகையில் போர் சூழல் மிக உச்சத்தில் இருப்பதால் பயணிகள் வட கொரியா நோக்கி செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளார். தற்போது விமான சேவையும் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளதால் ஒரு வகை பதற்றமான மன நிலையில் மக்கள் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்