வடகொரிய நிறுவனர் கிம் இரண்டாம் ஜங்கின் 105வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வடகொரியா அணுகுண்டு சோதனை அல்லது ஏவுகணை சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வடகொரியா சோதனை நடத்தினால், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா படைகள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. வடகொரிய நிறுவனர் கிம் இரண்டாம் ஜங்கின் 105வது பிறந்த தினம் இன்று கொண்டாப்படுகிறது.வழக்கமாக அவரது பிறந்தநாளில் பிரம்மாண்ட ராணுவ ஒத்திகை அல்லது ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொள்ளும்.இந்த முறை அணுகுண்டு சோதனை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையில் இறங்கியதை அமெரிக்காவின் செயற்கைகோள் படங்கள் உறுதி செய்தன. இதையடுத்து கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் தலைமையிலான போர் குழுவை அனுப்ப அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்த கப்பல் தற்போது தாக்குதலுக்கு தயாராக உள்ளது.திட்டமிட்டபடி வடகொரியா இன்று அணு ஆயுத சோதனையோ, ஏவுகணை சோதனையோ நடத்தினால், அந்நாடு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது நிச்சயம் என கூறப்படுகிறது. இந்நிலையில் எந்த அணு ஆயுத தாக்குதலுக்கும் பதிலளிக்க வடகொரியா தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்