இலங்கை படையினரிடம் உள்ள தங்களது நிலங்களை திரும்ப கையகப்படுத்துமாறு முல்லைத்தீவு பிரதேச மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் 55 நாட்களாக இன்றும் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள் ளவர்கள் இன்று புத்தாண்டை கறுப்பு தினமாக அறிவித்தனர். மேலும் தமது போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட 138 குடும்பங்கள் ஈடுபட் டனர். இராணுவத் தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அணுகிய இராணுவத்தினர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி கிண்டல் செய்தனர். எனினும் நாங்கள் புத்தாண்டை கொண்டாடும் மன நிலையில் இல்லை, எங்கள் சொந்த இடங்களுக்குச் செல் லும் நாளுக்காக காத்திருக்கிறோம், எங்கள் நிலங்களை விட்டு வெளியேறுங்கள் என மக்கள் உரத்துக் கூறினர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்