லண்டன்,ஏப்.19- இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் மீது ஆளில்லா விமானம் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் உயர்பாதுகாப்பு நிறைந்த பகுதிகளில் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆளில்லா விமானங்களை பறக்கவிட வேண்டாம் என லண்டன் நகர போலீசார் ஏற்கெனவே எச்சரித்துள்ள நிலையில் நேற்று நிகழந்த இந்த மோதல் விமான நிலைய அதிகாரிகளை பரபரப்படைய வைத்துள்ளது. ஜெனிவா நகரில் இருந்து வந்த அந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நண்பகல் 12.50 மணியளவில் லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது, அந்த விமானத்தின் முன் பகுதி மீது ஒரு சிறியரக ஆளில்லா விமானம் மோதியதாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக, இந்த மோதலால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 132 பயணிகள், விமானிகள் உள்ளிட்ட ஐந்து பணியாளர்களுடன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்
மேலும்40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்
மேலும்இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19
மேலும்