வரும் சனிக்கிழமை அன்று வட கொரியா அரசாங்கம் அணுகுண்டு ஏவுகணையை வீசி பரிசோதனை செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கொரியா தீபகற்பத்தில் அசாதார சூழ்நிலை நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில தினங் களுக்கு முன்னர் அமெரிக்கா போர்க் கப்பலை அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு வட கொரியா அரசு கடுமையான கண்டனங்களை தெரிவித்தது.மேலும், அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை அன்று அணுகுண்டு ஏவுகணையை வீசி வட கொரியா பரிசோதனை செய்ய உள்ளதாக அதர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வட கொரிய நாட்டிற்கு அணுகுண்டு அவசியம் தேவை என எண்ணிய முன்னாள் ஜனாதிபதியான Kim Il-Sung என்பவர் அணுகுண்டை தயாரிக்க தொடங்கியுள்ளார்.இவருடைய பிறந்த நாள் சனிக்கிழமை வரவுள்ளதால் இதே தினத்தில் வட கொரியாவின் 6-வது அணுகுண்டு பரிசோதனை நிகழ்த்தப் படவும் திட்டமிடப்பட்டுள்ளது. வட கொரியாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபை யின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து அணுகுண்டு பரிசோதனையில் ஈடுப்பட்டு வருவது அண்டை நாடுகள் மத்தியில் பெரும் கவலையை ஏற் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்