குயிட்டோ,ஏப்.19- ஈக்குவடார் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்து உள்ளது. தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் கடந்த சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6.58 மணிக்கு மியூஸ்னி நகருக்கு 27 கி.மீ. தொலைவில் 19.2 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்து தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் இது 7.8 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் கணித்தது. இந்த நில நடுக்கத்தைத் தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கை அறிவித்து, பின்னர் திரும்பப் பெற்றது. இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து முழுவீச்சில் மீட்புப் படையினர் களமிறங்கி மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் முழுக்கவனம் செலுத்தி வருகின்றனர். இயற்கை சீற்றம், 246 பேரை பலி கொண்டது. 2,527 பேரை படுகாயம் அடையச் செய்தது என்று ஈக்குவடார் தெரிவித்தது. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் உயிரிழந்தோர்கள் சடலமும், காயம் அடைந்த பலரும் இடுபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர். பலரது நிலை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சமானது தொடர்ந்து நிலவி வருகிறது. ஈக்குவடாரில் மழை வெள்ளத்தை தொடர்ந்து நிலநடுக்கமும் புரட்டிப் போட்டு உள்ளது. கட்டடங்கள், பாலங்கள் என அனைத்து கட்டமைப்புகளும் சுக்குநூறாகி உள்ளது. ஈக்குவடாருக்கு பெரும் பொருளாதார இழப்பையும் இயற்கை சீற்றம் ஏற்படுத்தி உள்ளது.
பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்
மேலும்40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்
மேலும்இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19
மேலும்