img
img

ஜொகூர் மாநில போட்டிகளில் இந்திய மாணவர்கள் சாதனை!
புதன் 12 ஏப்ரல் 2017 16:29:20

img

கடந்த சில நாட்களாக பத்து பகாட் துன் உசேய்ன் ஓன் பல்கலைக்கழகத் திடலில் நடைபெற்ற 50 ஆவது ஜொகூர் மாநில பள்ளிகளுக்கான திடல் தடப் போட்டிகளில் சில இந்திய மாணவர்கள் சாதனை முத்திரைகளை பதித்துள்ளனர். மொத்தம் 797 விளையாட்டாளர்கள் இப்போட்டியின் வயதுக் கேற்ற பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களில் ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி மாணவரான விசாகன் கிருஷ்ணன் (வயது 17) 3 ஆயிரம் மீட்டர் தடுப்பு ஓட்டத்தில் 10 நிமிடம் 35.95 விநாடி ஓடி புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். 18 வயதுக்குகீழ்ப்பட்டவர்களுக்கான சிறந்த ஓட்டப்பந்தய வீரராகவும் சிறப்பிக்கப்பட்ட கே.விசாகன் மூவா யிரம் மீட்டர் தடுப்பு ஓட்டத்தில் தங்கம் வென்றதோடு மேலும் இரு போட்டிகளில் தங்கமும் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். இவரைத் தவிர 15 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான திடல் தடப் போட்டியில் தாமான் யூனிவர் சிட்டி இடைநிலைப்பள்ளி மாணவரான ஹரிதாஸ் ரோபர்ட் 800 மீட்டர் ஓட்டத்தில் 2 நிமிடம் 4.64 விநாடி ஓடி புதிய சாதனை ஏற்படுத்தியதோடு 15 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான சிறந்த விளை யாட்டாளராகவும் சிறப்பிக்கப்பட்டார். அதே போல் பாசிர் கூடாங் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பத்ம லோஷினி ஜெயசீலன் பெண்களுக்கான 15 வயதுக்கு கீழ்ப்பட்ட 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் இரு தங்கங்களை வென்றதோடு சிறந்த விளையாட்டு வீரராகவும் சிறப்பிக்கப்பட்டார். மேலும் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட 1, 500, 2000 மீட்டர் ஓட்டத்தில் இரு தங்கங்களை வென்று புதிய சாதனை யை படைத்த புஸ்பலெட்சுமி ஜெயந்திரன் பெண்கள் பிரிவிற்கான சிறந்த விளையாட்டாளராகவும் சிறப்பிக்கப்பட்டார். ஜொகூர் மாநில இளைஞர், விளையாட்டு கலாச்சார, ஜொகூர் பாரம்பரிய பிரிவிற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சூல்கர்னைன் பின் ஹாஜி கம்சியான் பதக்கங்களை அணிவித்து சிறப்புச் செய்தார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img