சிரியா மீது ஏவுகணை வீச அமெரிக்க அதிபர் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகளான இவான்கா டிரம்பும் காரணமாக இருக் கலாம் என தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியாவில் சில தினங்களுக்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட ரசாயன தாக்குதலில் சிக்கி சுமார் 100 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 7-ம் திகதி சிரியா மீது அமெரிக்கா 59 ஏவுகணைகளை வீசியது. இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டானர். அமெரிக்காவின் இந்நடவடிக்கை சிரியா மற்றும் ரஷ்யா நாடுகள் கடும் கண்டனங்களை தெரி வித்துள்ளன. இந்நிலையில், அதிபர் டிரம்பின் மகனான எரிக் டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ஒரு அதிர்ச்சி தகவலை வெளி யிட்டுள்ளார். அதில், ‘இவான்கா டிரம்ப் தற்போது அதிபர் ஆலோசகராகவும் பதவி வகித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், டொனால்ட் டிரம்பின் அன்பிற்குரிய மகளாகவும் இவான்கா டிரம்ப் திகழ்ந்து வருகிறார். எனவே, சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த இவான்கா டிரம்ப் தனது தந்தைக்கு ஆலோசனை வழங்கியிருக்க கூடும். மகளின் விருப்பங்களையும் ஆலோசனைகளையும் தந்தையான டிரம்ப் எளிதில் நிராகரிக்க மாட்டார்’ என எரிக் டிரம்ப் வெளியிட்டுள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்