ஜேர்மனியில் கால்பந்து வீரர்கள் பயணித்த பேருந்திற்கு அருகே மூன்று குண்டுகள் வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Borussia Dortmund அணி வீரர்கள் பயணித்த பேருந்திற்கு அருகேயே குண்டுகள் வெடித்துள்ளது. இதில் காயமடைந்த Marc Bartra என்ற வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மாலை Westfalenstadion மைதானத்தில் நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் லீக் கால் இறுதியில் Borussia Dortmund அணி, Monaco அணியுடன் மோதவிருந்தது. இந்நிலையில், Borussia Dortmund வீரர்கள் பயணித்த பேருந்து Höchsten பகுதிக்கு அருகே சென்றுக் கொண்டிருந்து போது குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், பேருந்தின் ஜன்னல் கண்ணாடி தகர்ந்ததாக கூறப்படுகிறது. எனினும், வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதை கிளப் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து Dortmund பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்