பிலிப்பைன்ஸ் அருகே உள்ள லூசான் தீவில் தொடர்ச்சியாக மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் அருகே உள்ள மிகப்பெரிய தீவு லூசான். உயர்ந்த மலைகள் நிறைந்த இத்தீவு அதிக மக்கள் தொகை கொண்டதாகவும் உள்ளது. இன்று முத லில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலின்படி 5.7 ஆக பதிவானது. தொடர்ந்து சில மணிநேரத்திலேயே முக்கிய நகரங்களில் பெரும் சக்தி வாய்ந்த நடுக்கம் ஏற்பட்டது. அதிக அதிர்வலையை ஏற்படுத்திய இரண்டாம் நடுக்கம், அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே லேசான அதிர்வலைகள் உணரப்பட்டதாகவும் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், இழப்புகள் குறித்து முறையான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்