டமாஸ்கஸ்: சிரியா விமானப்படைத்தளம் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அங்கிருந்த ரசாயன ஆயுதக் கிடங்கு அழிக்கப்பட்டதாக தக வல்கள் கூறுகின்றன. சிரியா நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. சிரியா நாட்டில் உள் நாட்டுப் போரினால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்கள் தங்களது வீடுகளையும், இருப்பிடங்களையும் விட்டு புலம்பெயர்ந்து உள்நாட்டிலேயே அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமா னங்கள் செவ்வாய்கிழமையன்று ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது. நடத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய ரசாயன ஆயுதங் களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இந்த விஷவாயு தாக்குதலில் 20 குழந்தைகள், பெண்கள் உள்பட 72 பேர் உயிரிழந்ததாக மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன. ரசாயன வெடி குண்டுதாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் உலகை உலுக்கிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இச்சம்பவம் தொடர் பாக கடுமையான கருத்துக்களை தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்