வட கொரியா குடிமக்கள் வறுமையில் வாடி வரும் நிலையில் தன்னுடைய உல்லாசத்திற்காக அந்நாட்டு சர்வாதிகாரி கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச அளவில் சர்வாதிகாரியாக காட்டப்படும் வட கொரியா அதிபரான கிம் யோங் அன் தன்னுடைய தனிப்பட்ட உல்லாசத்திற்காக பணத்தை தண்ணீராக செலவிட்டு வருகிறார். குறிப்பாக, அதிபரை உற்சாகப்படுத்த 13 வயது நிரம்பிய சிறுமிகள் தெரிவு செய்யப்பட்ட அவர்கள் கற்புடன் இருக்கிறார்களா? என மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.பின்னர், Pleasure Squad என்ற குழுவில் சேர்க்கப்படும் இச்சிறுமிகள் அதிபர் விரும்பும்போது அவரை உற்சாகப்படுத்த வேண்டும்.கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இச்சிறுமிகள் அணிவதற்காக சுமார் 2.7 மில்லியன் பவுண்டில் உள்ளாடைகளை அதிபர் சீனா நாட்டில் இருந்து வரவழைத்துள்ளார். இதுமட்டுமில்லாமல், ஜேர்மன் நாட்டில் இருந்து சாம்பெய்ன் மது மற்றும் பீர்களை வரவழைத்ததுள்ளது மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்து பல வகையான ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்து உல்லாசமாக வாழ்க்கையை நடத்தி வருகிறார்.குடிமக்களுக்காக பிற நாடுகள் செலவிட்டு வரும் நிலையில், வட கொரியா அதிபர் தனது மூதாதையர்களின் சிலைகளை நாடு முழுவதும் நிறுவுவதற்காக சுமார் 33 மில்லியன் பவுண்ட்களை செலவிட்டுள்ளார். வட கொரியா முழுவதும் மில்லியன் கணக்கான குடிமக்கள் வறுமையில் வாடி வருவதாக ஐ.நா சபை குற்றம் சாட்டியுள்ளதை கண்டுக்கொள்ளாத இவரது உல்லாச நடவடிக்கைகள் கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்