உலகின் வளர்ச்சியடைந்துள்ள நாடொன்றில், இலங்கை இளம் பெண் ஒருவர் மின்சார ரயில் ஓட்டுனராக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இலங்கை யில் பெண்கள் ரயில் ஓட்டுநர்களாக செயற்படுவது பற்றி தகவல் இல்லை. எனினும் தேவிகா திலானி என்பவர் இத்தாலியில் அதி நவீன மின்சார ரயி லின் ஓட்டுனராக செயற்படுகின்றார். இலங்கையின் பூகொடை தரால பிரதேசத்தில் பிறந்த தேவிகா திலானி, மூன்றாம் வகுப்புவரை பூகொடை, தரால பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். அதன் பின்னர் அவரது பெற்றோர் இத்தாலியில் தொழிலுக்கு சென்றமையினால் அவருக்கு இலங்கையை விட்டு செல்ல நேரிட்டுள்ளது. இத் தாலியின் மெசினா, வெவியா கல்லூரியில் கல்வி கற்றவர், பொலனோ பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றுள்ளார். இலங்கை மீது அவர் அதிக விருப் பம் கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் தனது தொழிலாக ரயில் ஒட்டு பணியை தெரிவு செய்துள்ளார். அதற்கமைய இத்தாலி ரயில் ஒன்றில் சேவை செய்யும் முதல் இலங்கை பெண்ணாக திலானி காணப்பட்டுள்ளார். மேலும் அவர் தனது ஆடையில் இலங்கை கொடி ஒன்றை எப்போதும் அணிந்திருப்பது முக்கிய விஷயமாக காணப்படுகின்றது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்