img
img

சிரியாவில் விஷவாயு தாக்குதல்: சிறுவர்கள் உள்ளிட்ட 58 பேர் பலி
புதன் 05 ஏப்ரல் 2017 16:32:41

img

சிரியாவில் அரசு தரப்பு ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட விஷ வாயு வான்வெளி தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் 58 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப் பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன. இந்நிலை யில், அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து சிரிய விமானப்படையினரின் போர் விமானங்கள் நடத்திய வான்வெளி தாக்குதலை நடத்தி வருகின்றனர். இட்லிப் மத்திய மாகாணத்தில் உள்ள கான் ஷேகுன் நகரில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 58 அப்பாவி பொது மக்கள் பலியானதாக மனித உரிமை கண்கானிப்பகம் தெரிவித்துள்ளது. ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண் ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது என்ன வகையான ரசாயனம் என்பதை இன்னும் கண்டறியவில்லை என்றும் பிரித்தானியாவை மையமாக கொண்டு செயல்படும் அந்த கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக குளோரின் வி‌ஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகொப்டர் மூலம் வீசியதாக ஐ.நா. சபை அமைப்பு தனது விசாரணையில் அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img