அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மீது வட கொரியா அணுகுண்டுகளை வீசுவதற்கு முன்னர் அந்நாட்டு அதிபரை கொல்ல வேண்டும் என வட கொரியாவில் இருந்து தப்பி வந்த உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா சபை மற்றும் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அணு ஆயுதங்களை தயாரிப்பதும், அவற்றை சோதனை செய்வதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், வட கொரியாவில் இருந்து தப்பிய அரசு உயர் அதிகாரியான Thae Yong Ho என்பவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், அணு ஆயுதங்களை பயன்படுத்த வட கொரியா அதிபரான கிம் யோங்-அன் தயாராக உள்ளார்.உலகம் எதிர்ப்பார்க்கும் வகையில் கிம் யோங் அன் ஒரு சாதாரண நபர் இல்லை. கற்பனைக்கு எட்டாத கொடூரமான ரகசிய திட்டங்களை வைத்துள்ளார். தனக்கு அல்லது தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக சிறிய அறிகுறிகள் தெரிந்தாலும் கூட அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மீது அணுகுண்டுகளை வீடி பேரழிவை ஏற்படுத்துவார்.வட கொரியாவின் ராணுவம் தற்போது மிகவும் பலமானதாக முன்னேறியுள்ளது. எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயாராகலாம். உலக மக்களை பேரழிவில் இருந்து காப்பாற்றுவதற்கு வட கொரியா அதிபரை உடனடியாக கொல்ல வேண்டும் எனவும், இதற்கு உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் Thae Yong Ho எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்