வடகொரியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமெரிக்கா தனியாக எதிர்கொள்ளும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் சந்தித்து பேச இருக்கிறார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத் துக்கு ட்ரம்ப் அளித்த நேர் காணலில், சீனா ஜனாதிபதி ஜீ ஜின்பிங்குடான சந்திப்பில் விவாதிக்க நிறைய உள்ளது என்றார். வர்த்தகம் மற்றும் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் குறித்து சீனா ஜனாதிபதி ஜீ ஜின்பிங்குடான சந்திப்பில் பேச இருப்பதாகவும் டிர்ம்ப் தெரிவித்துள்ளார். மேலும் வடகொரியாவைப் பற்றியும் பேச இருக்கிறேன். வடகொரியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு நடவடிக்கை எடுக்க சீனா அமெரிக்காவுக்கு உத வினால் அது சீனாவுக்கு மிக நல்லது. அவர்கள் உதவவில்லை என்றாலும் அமெரிக்கா தனியாக சீனாவை எதிர் கொள்ளும்" என்றார் டிரம்ப். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் சீனா மற்றும் அமெரிக்காவிடையே வர்த்தகம், தென் சீனக்கடல் விவகாரத்தில் வார்த்தை மோதல்கள் நிலவிவந்தது. இந்த நிலையில் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக கருதப் படுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்