இராணுவத்திடம் சரணடைந்த உறவுகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் பரப்பியுள்ள வதந்தியை நம்புவதற்கு தயாரில்லை என்று கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவினர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். காலம் தாழ்த்தாது, ஸ்ரீலங்கா இராணுவத்தின் பிடியில் சிக்குண்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டம் இன்று 43 ஆவது நாளாகவும் இடம்பெற்றுவருகின்றது. இறுதி யுத்தம் நிறைவுபெற்ற பின்னர் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த போது, பேருந்தில் ஏற்றிச்செல்லப்பட்ட தனது மகனைத் தேடித் தாருங்கள் என்று தாயார் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.இராணுவ முகாமுக்கு அண்மை யில் வைத்து இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்ட கணவனுக்கு இராணுவமே பொறுப்புக்கூற வேண்டும் என ஒரு பெண் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று ஒரு மாதத்தை எட்டியுள்ளது. உடன டியாக நியாயம் கிடைக்கப்பெற வேண்டும், அரசியல் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் உடன் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலக முன்றலில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்