மோசடியான முறையில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை பெண்ணொருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். நிலாந்தி சேனாரத்ன என்ற இலங்கைப் பெண்னே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவு வழக்கறிஞர் ப்ரேங் லான்சா தெரிவித்துள் ளார். ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அது நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் பிறந்த அவரின் மகன் அந்த நாட்டில் இருக்க அனுமதிக்கப்பட்ட போதும், தாய் நாடு கடத்தப்பட்டுள்ளார். சேனாரத்னவின் மகன் ஆஸ்திரேலியாவிலேயே பிறந்துள்ளார். அவர் கெய்ன்ஸ்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆரம்பக் கல்வியை ஆரம்பித்துள்ளார். அதனால், அவருடைய பாட்டியுடன் அவர் அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் ஒரு அகதி என குறித்த இலங்கைப் பெண் மோசடி செய்துள்ளார். இதனால் இவர் தங்குவதற்கான அனுமதி தொடர்பில் கருத்திற் கொள்ள முடிய வில்லை என அமைச்சர் கூறியுள்ளார். நிலாந்தி சேனாரத்ன விசா ஒன்றுக்காக விண்ணப்பித்திருந்த போதிலும் அவரது விசா விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரால் அவரது மகனை வந்து பார்வையிடவும் முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது இளம் மகளை ஆஸ்திரேலியாவில் விட்டுச் செல்வது தனக்கு சந்தோசமாக இருப்பதாக நிலாந்தி சேனாரத்ன தெரிவித்துள்ளார். இருப்பினும், அவரது பயணச் செலவுகளுக்கு குடிவரவு திணைக்களமே பொறுப்பேற்றுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்