கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல்களை அடை யாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பலரை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரையடுத்து, இடி பாடுகளை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. உடல்களை அடையாளம் காணும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் விரைவில் சகஜ நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும், முழுவீச்சில் மேற் கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஈடுசெய்ய முடியளாத பேரிழப்பு என்பதை தாம் உணர்ந்துள்ளதாகவும், இந்த தாக்கத்திலிருந்து மக்களை மீட்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளதாகவும் கூறினார். கொலம்பியாவின் ஒரு மாகாணத்தில் கடந்த வியாழனன்று லேசாக துவங்கிய மழை, பின்னர் வலுப்பெற்று கொட்டித் தீர்த்ததால் மொகோவோ உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டின் பலபகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. மொகோவா நகரமும் பெரும் சேத்தை சந்தித்தது. 200-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்