மாலத்தீவின் பிரபல மொடல் அழகி வங்கதேச மருத்துவ கல்லூரி விடுதியில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மருத்துவ கல்லூரில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் 21 வயதான Raudha Athif மொடல் அழகியே இவ்வாறு இறந்துள்ளார். பிரபல மொடல் அழகியான Raudha Athif பெண்கள் விடுதியில் தங்கி மருத்துவ படிப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தின் போது Raudha Athifயின் அறை அடைக்கப்பட்டிருந்ததை கண்ட மாணவியர்கள் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.Raudha Athif தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 2014ம் ஆண்டு ப்ளூ நிற கண்களுடன் எடுக்கப்பட்ட Raudha Athifயின் மொடல் புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாகி பிரபலமடைந்தது. இந்த புகைப்படத்தை கண்ட மாலைத்தீவு முன்னாள் பிரதமர் Raudha Athifவை புகழ்ந்துள்ளார்.அதுமட்டுமின்றி, பிரபல பத்திரகையான VOGUE அட்டை படத்தில் Raudha Athifயின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்