தமிழீழ விடுதலைப் புலிகளின் பெருந்தொகைப் பணம் சுவிட்சர்லாந்து வங்கியொன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு சொந்தமான பணம் இவ்வாறு சுவிட்சர்லாந்தின் முதனிலை வங்கியொன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை காரியாலயத்திற்கு எதிரில் போராட்டம் நடாத்த அந்த வங்கியிலிருந்து பணம் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாகவே பாரியளவு பணம் வைப்புச் செய்யப்பட்டமை அம்பலமாகியுள்ளது எனவும் ஊடகத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்யுமாறு கூறி வடக்கில் உள்ள புலிகளுக்கு பணம் அனுப்பி வைக்கப் பட்டதாகவும், இந்தப் பணம் சுவிட்சர்லாந்தின் புலிகள் வலையமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து வங்கியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக, புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்