ஆஸ்திரேலியாவின் முக்கிய பகுதிகளை டெப்பி புயல் துவம்சம் செய்த நிலையில் சாலையில் இருந்து கொம்பன் சுறா ஒன்றை கண்டெடுத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் டெப்பி புயலை அடுத்து மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. முக் கிய சாலைகள் மற்றும் குடியிருப்புகள் பெருவெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே குயின்ஸ்லாந்து பகுதியில் சாலையில் ஒரு கொம்பன் சுறா ஒன்று ஒதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் எவரும் மழை வெள்ளத்தில் இறங்க வேண்டாம் என குயின்ஸ்லாந்து பேரிடர் மீட்புக்குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த சுறாவின் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தின் Ayr பகுதியில் இருந்து இறந்த நிலையில் சுறா கண்டெடுக்கப்பட்டுள்ளது. டெப்பி புயல் குயின்ஸ்லாந்து பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்பை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். அரசு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருந்த போதிலும் புயலின் கோரத்தால் உரிய நடவடிக்கைகள் அனைத்தும் தாமதமாகியுள்ளது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்