ஜெனிவாவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட யோசனையை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் மீண்டும் வாக்குறுதியளித்துள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமக்குள் இருக்கும் தேசத்துரோக எண்ணம் காரணமாகவே இந்த அறிக்கையை அரசாங் கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இதனை தவிர வேறு காரணங்கள் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். கடந்த வாரம் முடிவடைந்த ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் 2015 ஆம் ஆண்டு இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற் றப்பட்ட யோசனையை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் மீண்டும் வாக்குறுதியளித்துள்ளது. மேலும் இலங்கை படையினருக்கு எதிராக நிறைவேற்றப்படும் போர்க்குற்ற விசாரணை நீதிமன்ற பொறிமுறைக்கு மேற்குலக நாடுகளிடம் இருந்து நேர டியாக நிதியை பெற்றுக்கொள்ள இடமளிக்கவும் அரசாங்கம் மீண்டும் இணங்கியுள்ளது. இலங்கை படையினருக்கு எதிராக வழக்காட வெளிநாட்டு நீதி பதிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என பிரதமரும் அடிக்கடி கூறிய போதிலும், ஜெனிவாவில் இவர்கள் கடந்த வாரம் வழங்கிய வாக்குறுதி இதற்கு முற்றிலும் மாறானது. இதன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தினர் இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகி எண்ணத்துடன் செயற்பட்டுள்ளனர் என மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்