சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளி உள்ளிட்ட நால்வரை கொழும்பு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, தலா ஒரு லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அத்துடன், இது குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து வெல்லவாய நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெல்லவாய பகுதிக்கு விஜயம் செய்திருந்த போது, குறித்த நால்வரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளி ஒருவர் உள்ளிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்