img
img

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை
புதன் 29 மார்ச் 2017 18:32:05

img

இத்தாலி நாட்டில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அந்நாட்டு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இத்தாலி நாட்டின் ஆளும் கட்சியை சேர்ந்த 4 பெண் எம்.பிக்கள் இந்த புதிய மசோதாவை நாடாளு மன் றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளனர். இந்த மசோதா அடிப்படையில் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மாதவிடாய் அடையும்போது ஊதி யத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்.அதாவது, பெண்கள் மாதவிடய் அடையும் மாதங்களில் 3 நாட்களுக்கு இந்த விடுமுறை அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் ஊழியர்களுக்கு இதுபோன்ற சலுகைகள் அளிப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் கூட இதற்கு சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். பெண்களுக்கு பேறுகால விடுப்பு, மாதவிடாய் விடுப்பு என நிறுவனங்கள் அளித்தால், எதிர்காலத்தில் பெண்களை பணியில் அமர்த்த நிறுவனங் கள் தயக்கம் காட்டும். இதனால் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விமர்சனம் எழுந்துள்ளது.தற்போது இத்தாலியில் பெண் ஊழியர்களுக்கு பேறுகாலத்தில் 80 சதவிகித ஊதியத்துடன் 22 வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.இத்தாலி ஆலோசித்து வரும் இந்த புதிய சட்டமானது சாம்பியா, இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா நாடுகளிலும் சீனாவில் உள்ள சில மாகாணங்களிலும் ஏற்கனவே அமுலில் உள் ளது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img