லெகிங்ஸ் வகை ஆடைகளை அணிந்து சென்றதால் விமானத்தில் ஏற இரண்டும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Denver நகரி லிருந்து Minneapolis கவுண்டிக்கு இரு தினங்களுக்கு முன்னர் யுனைடட் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்ப தயாராக இருந்தது.விமானத்தில் ஏற இரண்டு இளம் பெண்கள் லெக்கின்ஸ் ரக ஆடை அணிந்து வந்திருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் லெக்கின்ஸ் ஆடை அணிந்ததால் விமானத்தில் ஏற அனுமதியில்லை என அவர்களுக்கு தடை போட்டனர். இரு பெண்களிடமும் மாற்று ஆடை இல்லாததால் அவர்கள் பயணம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் Jonathan Guerin கூறுகையில், எங்கள் நிறுவன விமானத்தின் வழக்கமான பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள் கிடையாது. ஆனால் விமானத்தில் ஏற மறுக்கப்பட்ட இரண்டு பெண்களும் அவர்களின் நிறுவனத்தின் பயண சலுகைகள் மூலம் இதில் பயணம் செய்ய இருந்தனர். அது போன்றவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது என அவர் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்