அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமான ‘புதிய சுகாதார மசோதா’ செனட் சபையில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் தோல்வியடைந்தது. ஒபாமா அரசின்போது நடைமுறையில் இருந்த ‘ஒபாமாகேர்’ என்ற சுகாதார மசோதாவின் சில பகுதிகளை நீக்கிவிட்டு புதிய மசோதா கொண்டுவருவதே ட்ரம்பின் முக்கிய நோக்கமாகும். அமெரிக்க நாடாளுமன்ற இரண்டு அவைகளும் ட்ரம்பின் கையில் இருந்த போதும் அவரது திட்டம் படுதோல்வி அடைந்தது. 'மசோதா தோல்வி அடைந் ததற்கு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள்தான் காரணம்' என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மக்களிடம் அதிக வரவேற்பு பெறாத இந்தத் திட்ட மசோதா அரசுப் பிரதிநிதிகளாலும் ஏற்கபடாமல் நிராகரிக்கப்பட்டது. குடியரசுக் கட்சியின் ஆட்சியில் ட்ரம்பின் முக்கிய திட்டமாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளி வந்த முதல் மசோதா தோல்வியடைந்து ட்ரம்ப் அரசின் படுதோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்