ஆஸ்திரேலியா நாட்டில் புதிதாக சூறாவளி ஒன்று உருவாகி விரைவில் கரையைக் கடக்க உள்ளதால் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய பொதுமக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள Queensland கடற் கரைப் பகுதியில் தான் ‘debbie’ என்ற சூறாவளி உருவாகி வலுப்பெற்று வருகிறது. தற்போதுள்ள சூழலில் இந்த சூறாவளி கரையைக் கடக்கும்போது 130 முதல் 150 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கன மழையும் பெய்யக்கூடும். வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், இந்த சூறாவளியானது Townsville என்ற கடற்கரை நகரை தாக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் வசிக்கும் சுமார் 1,80,000 மக்கள் தங்களுடைய குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்க ளில் தஞ்சம் அடையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.‘debbie’ சூறாவளியானது வரும் திங்கள்கிழமை காலை வேளையில் கரையைக் கடக்கும் எனவும், சில நேரங்களில் முன்னதாகவே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத் துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்