தென்கொரியாவில் கடலில் மூழ்கி 304 பேரை பலிகொண்ட கப்பல் கடலுக்கு அடியில் இருந்து தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது.கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் திகதி மாணவ, மாணவிகள் பலர் உல்லாசப்பயணம் மேற்கொண்டனர். அப்போது திடீரென்று கப்பல் ஜிண்டோ தீவில் உள்ள கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உட்பட சுமார் 304 பேர் உயிரிழந்தனர். அந்த கப்பல் விப்பத்துக்குள்ளான நிலையிலே கடலுக்கு அடியில் சென்றுவிட்டது. இதன் எடை 6 ஆயிரத்து 825 டன்.கடலுக்குள் மூழ்கிய இந்த கப்பலை தூக்கி நிறுத்தி மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் அதற்கான நட வடிக்கையை அந்த நாட்டு அரசு மேற்கொண்டது. அதன் விளைவாக கடுமையான முயற்சிக்குப்பின்னர் அந்த கப்பல் இப்போது கடலுக்கு அடியில் இருந்து தூக்கி நிறுத்தப்பட்டு விட்டது.இதில் நூற்றுக் கணக்கான சீன தொழிலாளர்கள் ஈடுபட்டதாகவும், அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.மேலும் இக்கப்பல் இன்னும் 2 வாரங்களில் துறைமுகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்