பா.ம.க கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஈழத்தமிழர்கள் குறித்து, மனித உரிமைகள் ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களுடன் ஐ.நா அறையில் அவசர சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை குறித்த மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை நேற்று பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.மேலும், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது. தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான வ.கௌத்தமன் உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்