கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற வாகன முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் பிணை தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அவர் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் தற்போது அவர் எழுதிய கடிதம் வைரலாக பேசப்படுகிறது. “நிறைவடையாத என் வாழ்வுப் பயணம் சிறைக்குள்ளேயே முடிந்து போகுமா” என்று அவர் எழுதிய வாசங்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப் படுகின்றது. குறித்த அவருடைய வசனங்கள் காரணமாக “விமல் சிறைக்குள்ளேயே மரணிப்பாரா? அவருடைய வாழ்வு முடியப்போகின்றதா? வாழ்வை முடித்துக் கொள்ள தீர்மானித்து விட்டாரா? எனவும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் விமல் தொடர்பில் அவருடைய ஆதரவாளர்கள் அரசியல் நண்பர்கள் மூலமாக அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் ஏற்படுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது.இதேவேளை விமலை கொலை செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தெரிவித் திருந்த நிலையில்., வாழ்வு நிறைவு பற்றி விமல் வீரவங்ச எழுதிய கடிதம் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தக் கூடும் எனவும் கூறப் படுகின்றது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்