பிரித்தானியாவில் நாடாளுமன்ற தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்காவிலும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஸ்கான்சின் மாகணத்தில் மூன்று இடங்கில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பொலிசார் ஒருவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். முதலில் ரோத்ஸ்சைல்ட் அருகிலுள்ள மராத்தான் வங்கியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலிசார் விரைந்து சென்று பார்த்தபோது குற்றவாளி தப்பி ஓடியுள்ளான். பின்னர், 10 நிமிடங்களுக்கு பிறது Schofield அருகிலுள்ள சட்ட நிறுவனத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, வெஸ்டானில் பகுதியில் உள்ள அடுக்குமாடி வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் சரமாரியாக சுட்டு தப்பி ஓடியுள்ளான். அடுத்தடுத்து, வங்கி, சட்ட நிறுவனம் என 3 வெவ்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, 100க்கும் மேற்பட்ட பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிசார், அவனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித் துள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்