சோமாலியா நாட்டில் இருந்து புகலிடம் கோரி கடல் வழியாக புறப்பட்ட படகு மீது ஹெலிகொப்டர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 42 அகதிகள் பலியாகி யுள்ளதாக அதிர்ச்சி தகவல் கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது.இந்த யுத்தத்தில் இருந்து உயிர் பிழைத்து தப்பிக்கும் மக்கள் அண்டை நாடுகளில் குடியேறி வருகின்றனர்.இந்நிலையில், சோமா லியாவை சேர்ந்த 150 அகதிகள் படகு ஒன்றில் செங்கடல் வழியாக புறப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டிற்கு அருகே சுமார் 30 கி.மீ தொலைவில் படகு வந்தபோது திடீரென ஒரு வானில் ஹெலிகொப்டர் பறந்துள்ளது. ’நாங்கள் அகதி கள்.....எங்களை சுடாதீர்கள்’ என சிலர் விளக்குகளை கைகளில் ஏந்திக் காட்டியுள்ளனர். இதை பார்த்த ஹெலிகொப்டர் துப்பாக்கி சூட்டை நிறுத்தி யுள் ளது. மேலும், சவுதி அரேபியாவை சேர்ந்த கூட்டுப்படை இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், உறுதியான தகவல்கள் இது வரை வெளியாகவில்லை. படகு கரைக்கு திரும்பியதும் அதில் ஒருவர் மீது ஒருவராக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் சடலங்கள் கிடந்துள்ளது. இத்தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். நடுக்கடலில் அகதிகளின் படகு மீது நிகழ்ந்த இந்த தாக்குதலுக்கு ஐ.நா சபை கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துள் ளது குறிப்பிடத்தக்கது. பின்னர், படகு மீது ஹெலிகொப்டர் குண்டு மழை பெய்துள்ளது. படகில் இருந்த அகதிகள் அலறியடித்துக்கொண்டு அங்கும் இங் கும் ஓடியுள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்