பிரான்ஸ் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதால் பொது மக்களை பொலிசார் அவசரமாக வெளியேற்றி வருகின்றனர். பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள Orly விமான நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமான நிலையம் பொலிசார் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், பயணிகள் மற்றும் பொதுமக்களை பொலிசார் அவசரமாக வெளியேற்றியுள்ளனர். விமான நிலையத்தில் அதிரடிப்படையின் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள் ளது. விமான நிலையத்தில் இருந்த ராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கியை மர்ம நபர் ஒருவர் பறிக்க முயன்றுள்ளார். அசம்பாவிதம் நிகழாமல் இருப்பதற்காக, பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் மர்ம நபரை சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்